அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மத்திய அமெரிக்கா ஊடாக செல்லும் அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் மீது பனாமா அதிக வரியை விதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரிசோனா மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பனாமா கால்வாயில் சீனாவின் செல்வாக்கு குறித்து எச்சரிக்கும் வகையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் இதனைத்  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிகழ்விற்குப் பிறகு, அவர் பனாமா கால்வாய் மீது அமெரிக்கக் கொடியின் படம் இருக்கும் வகையிலான புகைப்படத்தை தமது  சமூக ஊடகத்தில் பதிவிட்டு அமெரிக்கக் கால்வாய்க்கு வரவேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here