நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு, நேற்றைய நாளில் இருந்த 380,000 ரூபாயைவிட அதிகரித்துள்ளது. அதே நேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாவாக உயர்ந்து, நேற்றைய 351,500 ரூபாவை கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்திருப்பதால், உள்ளூர் சந்தையிலும் விலைகள் உயர்வு காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here