தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு பேரின் உடல்கள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளன.
மரணமடைந்த இடத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.








