தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவைகள் வாரம் இன்று (செப்டம்பர் 22) இல் இருந்து தொடங்கியுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் கீழ்,
நாடு முழுவதும் இந்த சேவைகள் வாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டம் உள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் மூலம், ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களின் பிரச்சினைகள் தீர்வு, வேலைவாய்ப்பு கண்காட்சிகள், சட்ட ஆலோசனைகள்,வழிகாட்டுதல் உள்ளிட்ட தொழிலாளர் அமைச்சக சேவைகள் வழங்கப்பட உள்ளன.
இத்தகைய சேவைகள் பொதுமக்கள் மத்தியில் நேரடியாகக் கொண்டு செல்லப்படும் என்பது முக்கிய அம்சமாகும்.








