கிளிநொச்சி அக்கரயான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி ஆடை தொழிற்சாலையில் இருந்து நேற்று (12.02.2025) மாலை அக்கராயன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து மதுபோதையில் வந்தவர் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளதுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அதே சமயம் கிளிநொச்சியிலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி அக்கரயான் பகுதிக்கு சென்ற பொழுது வீதியால் பயணித்த மற்றுமொரு பேருந்தினையும் மறித்து குறித்த தனியார் பேருந்து சாரதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆடை தொழிற்சாலை பேருந்தின் சாரதி மற்றும் தனியார் பேருந்து சாரதி இருவரும் அக்கரயான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை அக்கரயான் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here