வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி, தமிழரசு கட்சியினால் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் இன்று (18) அமைதியான நிலையுடன் காணப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு களுவாஞ்சிக்குடி பிரதேச வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்ததோடு, கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் மருந்தகங்கள் திறந்தே காணப்பட்டன.

இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் வழமை போல் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு நிருபர்- சோபிதன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here