வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த சுமார் 100 அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
அரசியலில் நுழைந்தபோது பணமில்லாமல் இருந்த இந்த அரசியல்வாதிகள் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின் நெருங்கிய சகாக்களின் பெயர்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் பெயரளவில் அவர்களின் நெருக்கமானவர்களின் பெயர்களில் இருந்தாலும், அவை உரிய அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அரசியல்வாதிகளில் கடந்த காலங்களில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் அமைச்சர் பதவிகளை வகித்தவர்களாகும்
அத்துடன் ஆளுநர்கள் மற்றும் பல உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் அடங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








