இராஜதந்திர உறவைத் தாண்டியும் தமிழ் மக்களுடன் இந்தியா நெருக்கமாக செயற்படுவதாக யாழ்ப்பாண இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து இந்தியா செயற்படும்.
யாழ்ப்பாணம் உதவி உயர்ஸ்தானிகராலயம் வடக்கு மக்களின் நல்ல நண்பனாகவும் சகோதரனாகவும் செயற்பட்டுவரும் நிலையில் பகைவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சில வேளைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் நலன்களில் என்றும் ஆதரவாளனாக செயற்படுவோம்.
இந்தியா மக்கள் யாழ்ப்பாண மக்களின் அறிவாற்றலை அன்றும் இன்றும் பெருமை கொள்பவர்கள் என்பதை கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைவதோடு அதனை இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நன்கு உணரும் என யாழ்ப்பாண இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.








