யாழில் பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (22.05.2025) இடம்பெற்றுள்ளது.
8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றையதினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.








