தரமற்ற  சவர்க்காரங்களை  பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு வகையான ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தரமற்ற  சவர்க்காரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு தரமற்ற சவர்க்காரங்களைக் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பல விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் சங்க பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

மேலும் குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. எனவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும்.எனவும் கூறியுள்ளார்.

எனவே, பெற்றோர்கள் அனைவரும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சவர்க்காரங்களை மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here