Saturday, April 18, 2026
No menu items!

வைத்தியர்கள்

சேவையை விட்டு விலகிய வைத்தியர்களிடம் ரூ.1,277 மில்லியன் நிலுவை – தேசிய கணக்காய்வு அலுவலகம்!

சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு ரூ.1,277 மில்லியனுக்கும் அதிகமான நிலுவை பணம் மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலைமையில் உள்ளது என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் (NAO) தெரிவித்துள்ளது. இதில் பிணை முறைகள், தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் அடங்கும். இந்த நிலுவைகள் 2024 அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் அரசாங்கத்தால் அறவிடப்பட...

வாகனங்களில் அடையாள சின்னங்களை அகற்றும் திட்டம் இல்லை – சுகாதார அமைச்சர்!!

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, 'அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை' என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சர், மருத்துவத் துறையில் அடையாள...

வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்– 11 ஆம் திகதிக்குள் தீர்வு வராவிட்டால் நடவடிக்கை!

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதித காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர்...

திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு..!

யாழில் பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (22.05.2025) இடம்பெற்றுள்ளது. 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றையதினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் உடற்கூற்று...

வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி!

சில அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக விற்பனை மோசடி இடம்பெறுவதாகச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சில விசேட வைத்தியர்களின் உதவியுடன் பெறப்பட்ட சிறுநீரகம் ரூ.4 மில்லியன்...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் சிரமத்தில் நோயாளர்கள்..!

அனுராதபுரம் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல மயில் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில்...

வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்; MP. அர்ச்சுனா தெரிவிப்பு!

வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அல்லது அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகப் பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். வைத்தியர்கள் மாத்திரமல்ல தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறினர். எமது நாட்டை...

ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்..!

இலங்கையில் சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாகவும் சுமார் 2,000 வைத்தியர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார். மேலும் 5,000 வைத்தியர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

புதன்கிழமை (22/1/2025) யாழ்ப்பாணம் - றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் மரணம்…!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19.11.2024) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே நேற்றைய தினம்(19.11.2024) செவ்வாய்கிழமை மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாகவே...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img