பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள தியவன்னா ஓயாவில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
60 முதல் 65 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சடலம் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








