தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியில் கிரிவடுன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை கடக்க முற்படும் போது எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here