இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இரத்மலானை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயன்ற போது அதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் திருடர்களை பிடிக்க முயன்றுள்ளார்.

இதன்போது, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் திருடனின் கால்களை இறுக்கமாக பிடித்து கொண்டுள்ளார்.

பின்னர், அந்த திருடர்கள் இருவரும் ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்தி காயப்படுத்தி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது ரயில்வே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here