மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து காலை எட்டு மணிக்கு தரையிறங்கிய விமானத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த விமானத்தில் இருந்த 135 பயணிகளும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே, விமானத்தை அதிகாரிகள் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.








