துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபரொருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு மற்றும் 310 கிராம் போதைப்பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர், மத்துகம பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here