இன்று (19)காலை மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியான பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை செய்யும் நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மீன் விற்பனை செய்யும் நபரும், அங்கு மீன் கொள்வனவு செய்ய வந்த மீன் வியாபாரி ஒருவரும், மரணமடைந்த நபரின் நண்பர் ஆகிய இருவரும் காயமடைந்து கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும் குறித்த மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார். அவர் 38 வயதுடைய கொவியாபான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சகோதரரும் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இக்கொலையானது வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றவாளிகளின் செயல் என தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







