தென் மாகாணத்தில் அதிகமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் பதிவாகுவதையடுத்து, அவற்றின் காரணங்களை கண்டறிவதற்காக ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து விசேட அறிவியல் ஆய்வுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டு, ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் குற்றங்களைத் தடுக்கும் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.








