தெற்கு அதிவேக வீதியில் 26 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

செயலிழந்த லொறி ஒன்றின் பாதுகாப்புக்காக லொறிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி ஒன்றின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரின் சாரதி தொலைபேசி அழைப்பொன்றைத் தொடர்பு கொண்டு கவனக்குறைவாகக் காரை செலுத்தியுள்ளதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது  காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here