தெஹிவளை – கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் இன்று (20.09.2024) காலை இந்தத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here