தெஹிவளையில் வீடொன்றில் கொள்ளையடித்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிசி மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை புகையிரத நிலைய வீதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்தை திருடியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி லியனாராச்சி தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here