தேயிலை தொழில்துறையைப் பலப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலி – பத்தேகம நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை தொழிற்சாலைகளின் தரப்படுத்தலுக்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தொழில்துறையின் பொன்னான யுகம் எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தின் ஊடாக உருவாக்குவோம்.
சிறு தோட்ட தேயிலை உற்பத்தியாளர்களுக்குத் தேயிலை உற்பத்தி செய்யும் காணிகளில் 40 வீதமான உரிமம் இருந்தாலும், அவர்கள் மொத்த தேசிய தேயிலை உற்பத்தியில் 70 வீதமான பங்களிப்பையே வழங்குகின்றார்கள்.
அவர்களை வலுப்படுத்தும் வகையில் 50 கிலோ கிராம் உரம் மூடையொன்றை 5,000 ரூபாவிற்கு வழங்குவதோடு, தேயிலை மீள் நடுகை செயற்திட்டத்திற்கு அரசாங்கம் தலையீடு செய்து உதவிகளை வழங்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேயிலைக்கான நிர்ணய விலைக்கு அரசாங்கத்தின் தலையீடு இல்லாவிட்டாலும் அந்த தொழில்துறையைப் பலப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.







