உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வரவு செலவை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, நாளையுடன் இதற்கான கால எல்லை நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போதான செலவீனங்களை கோரியுள்ளது.

மேலும் கட்சியின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் இது குறித்த சமர்ப்பனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் நிதி வெளிப்படுத்தல்களைச் சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் பிரச்சார நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி குறித்த நிதி வெளிப்படுத்தல் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வேட்பாளர்களின் வரவு செலவை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை குறித்து தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here