நேற்றிரவு (18) தங்காலை, நலகம, தெமட்டவெவ பகுதியில் உள்ள தென்னங்காணி ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும், 33 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மாடுகளை பராமரிக்கும் உரிமையாளர் எனவும் நேற்றையதினம் மாலை 6.00 மணியளவில் மாடுகளை மீண்டும் அழைத்துவர சென்ற நிலையில் வீடு திரும்பாததை அடுத்து, அவரது சகோதரர் இது தொடர்பில் சென்று பார்த்த வேளையில், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும். குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நாட்டுத் துப்பாக்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தங்காலை தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here