நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 618 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 14 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்  போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள 5 பேரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 234 கிராம் 799 மில்லிகிராம் ஹெரோயின், 239 கிராம் 795 மில்லிகிராம் ஐஸ், 2,134 கிராம் 866 மில்லிகிராம் கஞ்சா,  739 கஞ்சா செடிகள் ஆகியவை  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here