தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கங்குவா, சூர்யா 44 என்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும், மெய்யழகன் மற்றும் இன்னுமொரு திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை  120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்கும். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் காணப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here