தொழுநோயின் அபாயத்தைக் குறைத்து, சிகிச்சை வசதிகளை மேம்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டில் தொழுநோய் பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், தொழுநோய் பரவலை முற்றிலுமாக ஒழிப்பதற்கான தற்போதைய தேசிய முயற்சிகளை இந்த மாநாடு வலுப்படுத்தும் என நம்புவதாகவும், இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் சசகாவா அறக்கட்டளைக்கு நன்றியைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here