அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளின் படி,
குறித்த பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர் கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த மாதம் 29ஆம் திகதி இப்பலொகம பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய விசாரணையில், அதிபரின் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதையடுத்து, அதிபரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.








