வெள்ளவத்தை கடலில் மூழ்கிய நண்பனை காப்பாற்ற முயன்ற மற்றைய நண்பன் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனது நண்பனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் சிலருடன் இணைந்து வெள்ளவத்தை கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பிறந்த நாளை கொண்டாடிய நண்பன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த நண்பன் தனது நண்பனை காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here