Depressing thoughts.

பண்டாரவளை, லியாங்கஹவெல- அம்பதண்டேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து கொடூரமாக சித்திரவதை செய்த தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை அம்பதந்தேகம பிரதேசத்தின் லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவியின் தாயார் அம்பதண்டேகம ரொஸ்லாந்தேகம பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் அவருக்கு ஆறு வயதுடைய சகோதரியொருவர் இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here