நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (27.05.2025) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் யாழ். மாநகர சபையினராலேயே முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.








