இலங்கை காவல்துறை இரண்டு நாட்கள் மேற்கொண்ட சோதனைகளின் போது ஹெராயின், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பல நபர்களைக் கைது செய்துள்ளனர்.

இச் சோதனையானது மே 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

கிராண்ட்பாஸில் இடம்பெற்ற சோதனையின் போது 24, 30 மற்றும் 34 வயதுடைய மூன்று ஆண்களையும், 80 வயதுடைய ஒரு பெண்ணையும் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள்  50 கிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 05 கிராமுக்கு மேல் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நிட்டம்புவ மற்றும் பேலியகொட ஆகிய இடங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 127.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 34 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

தலங்கம பொலிஸார் 21 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கொழும்பு 14 ஐச் சேர்ந்த 20 வயது ஆண் ஒருவர் நேற்று கிராண்ட்பாஸில் 11.1 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 15 ஐச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் மட்டக்குளியில் 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டியவில் 7.3 கிராம் ஹெராயினுடன் 66 வயதுடைய ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெமட்டகொடையில், 21 கிராம் ஐஸ் மற்றும் 30 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த காவல் நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here