நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் பல ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு புதிய ஆட்களை நியமிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here