நேரடியான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவரின் அவசரத் தேவையை தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனிப்பட்ட அல்லது குடும்ப நலன்களை விட தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
“தேவையான சட்ட சீர்திருத்தங்களை நாங்கள் அமுல்படுத்தியுள்ளோம். இப்போது, நேரடியாக முடிவெடுக்கும், மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி செய்யக்கூடிய ஒரு தலைவர் நமக்குத் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.








