சுமார் 80 முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“ஆரம்பத்தில் அந்த அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்க மேடையில் இருந்தார்கள், இப்போது யார் இருக்கிறார்கள்? ஊடகப் பேச்சாளர்களாக இருந்தவர்கள் இருந்தார்கள், இப்போது யாரும் இல்லை, அவர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவின் உண்மைத் தன்மையை புரிந்துகொண்டுள்ளனர். அவர்கள் SLPP யை இழந்துவிட்டதாகவும், இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர முடியாது என்றும் அவர்கள் உணர்ந்துள்ளனர், அவர்கள் இரு உலகங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

அவர்களில் பலர் ஏற்கனவே விசாவைப் பெற்று நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர் என்று அவர் மேலும் விளக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here