தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை (7) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது சுதந்திர இலங்கையின் 80வது வரவு செலவுத் திட்டமாக அமைகிறது.

நிதி அமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் உள்ள அனுரகுமார திசாநாயக்க, நாளை ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பை அல்லது வரவு செலவு திட்ட உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.

மசோதாவின் முதல் வாசிப்பு ஏற்கனவே செப்டம்பர் 26, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாம் வாசிப்பு விவாதம் வரும் சனிக்கிழமை நவம்பர் 8ம் திகதி தொடங்கி ஆறு நாட்கள் நீடிக்கும்.
பின் அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

மேலும், குழுநிலை விவாதம் நவம்பர் 15ம் திகதி முதல் டிசம்பர் 5ம் திகதி வரை 17 நாட்கள் தொடரும்.
மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு டிசம்பர் 5ம் திகதி  மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here