நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை மகளிர் அணி குழாம் நேற்றைய தினம் பெயரிடப்பட்டது.
சமரி அத்தபத்து தலைமையிலான அணியில் 16 பேர் அடங்குகின்றனர்.
இந்த அணி எதிர்வரும் 22 ஆம் திகதி நியூசிலாந்து நோக்கிப் பயணிக்கவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 14 ஆம் திகதி தொடங்கவுள்ளது.







