கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பெண்கள் போதைக்கு அடிமையாகும் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவது குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு கடும் கவலை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார், சமீபத்திய தகவல்களின் படி இளம் பெண்களும் யுவதிகளும் “ஐஸ்”, மாத்திரைகள், மதுபானம், சிகரெட் போன்ற போதைப்பொருட்களுக்கு ஆபத்தான அளவில் அடிமையாகி வருகிறார்கள்.

காவல்துறை மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தரவுகளின்படி, இந்தப் போக்கில் மிகுந்த உயர்வு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் போதைக்கு அடிமையாதல், குழந்தைகளின் அறிவுசார் மற்றும் உடல் வளர்ச்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என அமைச்சர் எச்சரித்தார்.

இந்த நிலையை கட்டுப்படுத்தவும், மறுவாழ்வு மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அமைச்சு ஒரு விசேட வேலைத்திட்டம் உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here