சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
“அறிக்கையில் உள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” ஆனால், முழு அறிக்கையும் தவறானது என கூறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரியைக் கொள்முதல் செய்வதில் எந்த மோசடியும் இடம்பெறவில்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு.எனினும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கை, மோசடிக்கான ஆதாரங்களைக் குறிப்பிடாமல், ‘மோசடிக்கு சாத்தியமான சூழ்நிலைகளைப் பற்றி மாத்திரமே குறிப்பிடுகிறது’ என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
கொள்முதல் விதிகள் மீறப்பட்டிருந்தால்,கணக்காளர் நாயகம் நேரடியாகக் கூற வேண்டும் எடுத்துக்காட்டாக: “இந்தப் பதிவு நடைபெறவில்லை, எனவே இந்தப் பகுதி பொருத்தமற்றது.”என குறிப்பிட வேண்டும் என தாம் கருதுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மீது நிரூபிக்கப்பட்ட மோசடி எதுவும் இல்லாததால், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தமை அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
.








