சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) சிறை அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், நேற்யை தினம் புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here