பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, இறக்குமதியாளரின் விபரங்களின்றி உணவுப்பொருள் விற்பனை செய்த மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலையைக் காட்சிப்படுத்தாமல் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here