நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, நேபாளத்தின் லலித்பூரில் பகுதியிலுள்ள நகு சிறையிலிருந்து சுமார் 1,500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் தலைவர் ரபி லமிச்சானே விடுவிக்கப்பட்டதையடுத்து, இவ்வாறு பெருமளவானோர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தின் போது, சிறைச்சாலையில் குறைந்தது 1,500 கைதிகள் இருந்துள்ளனர்.
காவல்துறையினர் தமது பணியிடங்களை விட்டுச் சென்றதால் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.