பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த பெலியஅத்த வஹரக்கொட அலஹேன பகுதியைச் சேர்ந்த பாலமானகே ஆரியபால என்ற 72 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here