தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளங்காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு மோசடி செய்பவர்கள், தனிநபர்களிடம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து, குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம்அவர்களை தொடர்புகொண்டு பரிசுகளைப் பெற வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துமாறு மோசடிக்காரர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரான விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடிகளுக்கு உட்படாமல் இருக்கவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதோடு எந்தவொரு பரிசு கோரிக்கைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், தேவையற்ற செய்திகள் அல்லது அழைப்புகளின் அடிப்படையில் எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here