எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பில் முறைபாடளிக்குமாறும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் மாத்திரம் 2,700 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.








