பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம், பெலவத்தையில் அமைந்துள்ள ஆளுங் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு செல்லும் வீதியை மறித்தவாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நீண்ட காலமாகியும் உரிய தொழில் கிடைக்காமல் இருக்கும் பல பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here