பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதியில் நடந்த இறுதிச் சடங்கொன்றின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதன்போது ​​கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here