பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது அபிலாஷைகளின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பி.டி.ஏ பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்களின் அபிலாஷையோ கொள்கையோ அல்ல. எனினும், புதிய சட்டம் இயற்றப்படும் வரை, தற்போதுள்ள சட்டத்தை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் வரை இது அவசியம்” என்று ரத்நாயக்க கூறினார்.

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கவலைகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் செய்வதிலிருந்து குடிவரவு அதிகாரிகள் பயணத் தடையை காரணம் காட்டி தடை செய்யப்பட்டதாக ஹக்கீம் கூறினார்.

அத்தகைய தடைக்கு நீதிமன்ற உத்தரவு தேவை என்றும், அது நடைமுறையில் இல்லை என்றும் ஹக்கீம் வாதிட்டார். தெளிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீதரன் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டார், என ஹக்கீம் கூறினார்.

குறித்த கவலைக்கு பதிலளித்த ரத்நாயக்க, இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்த ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

“இந்த நிகழ்வில் இது பயங்கரவாத தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. இது அவரால் தெரிவிக்கப்பட்டது அல்ல. எனவே இது அரசாங்கத்தின் முடிவு அல்லது கொள்கையினால் ஏற்பட்ட சம்பவம் அல்ல” என ரத்நாயக்க கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here