இந்தியா, ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் நேற்றைய தினம் (15.07) பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற படை வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேசா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதற்கு இராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையிலான நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 4 இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 4 இராணுவ வீரர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here