ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிக்கு  அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து ரி20 உலகக் கிண்ண போட்டிக்கான பாதுகாப்பை அமெரிக்கா அதிகரிக்கும் என நியூயோர்க் ஆளுநர் கவர்னர் தெரிவித்துள்ளார்.

மேலும்  ”உலகக் கிண்ணப் போட்டிக்கான ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக பார்வையாளர்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமஷ்டி மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் எனது அணி இணைந்து பணியாற்றி வருகிறது. இதுவரை நம்பத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை” எனவும் ஆளுநர் கத்தி ஹோச்சுல்  குறிப்பிட்டுள்ளார்.

நியூ யோர்க் சிட்டியில் நடைபெறும் உலகக் கிண்ண சுற்றுப் போட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபடலாம்  அல்லது இடையூறுகளை ஏற்படுத்தலாம்  என நியூ யோர்க் சிட்டி பொலிஸாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன.

மேற்படி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் ஜூன் 9ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பித்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here